குழந்தைகள் கோபத்தை குறைப்பது எப்படி?

குழந்தைகள் கோபத்தை குறைப்பது எப்படி?

children-anger-how-to-control.



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

SHARE MARKET TRAINING

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


குட்டீஸ்... சமர்த்துப் பிள்ளையான உங்களை, நீங்கள் ரொம்ப கோபப்படுவதாக மற்றவர்கள் கூறுவதுண்டா? அப்ப கோபத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்...


உங்களுக்கு கோபம் வருமா? குட்டீஸ். அம்மா, நீங்கள் கேட்ட பொம்மையை, சாக்லெட்டை வாங்கித் தராவிட்டால் கோபம் வந்துவிடுகிறதா? அம்மா கூப்பிட்டாலும் சத்தம் கொடுக்காமல் முகத்தை திருப்பிக் கொள்கிறீர்களா? கோபம் கொடியது என்பதை நீங்கள் அறிவீர்களா? கோபம் ஏன் வருகிறது? கோபத்தால் விளையும் தீமைகள் என்ன? கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அறிந்து கொள்ளலாம்...


* உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாக கோபம் வருகிறது. வெறுப்பு, வலி, பயம் ஆகியவையே கோபத்தின் வேர்களாக உள்ளன. ஆரம்பத்தில் எதிர்பார்ப்பின் காரணமாக வெறுப்பும், வலியும் ஏற்படலாம். நம்பிக்கையின்மை, அறியாமை, சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயமும், கோபம் உருவாக காரணமாகலாம். நீங்களாக யோசித்துப் பார்த்தால் கோபத்தின் அடியில் இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு இருப்பதை உணரலாம். எதிர்பார்ப்பை குறைப்பதன் மூலம் வெறுப்பை தணிக்கலாம். வெறுப்பை கைவிட்டால் கோபமும், துன்பமும் பறந்துபோகும்.



குட்டீஸ்... சமர்த்துப் பிள்ளையான உங்களை, நீங்கள் ரொம்ப கோபப்படுவதாக மற்றவர்கள் கூறுவதுண்டா? கோபத்தால் உண்டாகும் தீமைகளை இங்கே தெரிந்துகொண்ட பிறகும் கோபப்படுவது தவறு என்பதை புரிந்து கொண்டீர்களா? கோபத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்...


* பேசுவதில் கவனம் வையுங்கள். இனிமையாக பேசுங் கள். உங்கள் வார்த்தைகள் மற்றவர் மனதை காயப் படுத்தாத வகையில் இருந்தால் அவர்களும் உங்க ளை கோபப்படும் அளவுக்கு காயப்படுத் தமாட்டார்கள்.


* விளையாட நேரம் ஒதுக்குங்கள். அது மனதை பக்குவப்படுத்தும். சவாலான நேரங்களையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை எட்டும்.


* சிறிது நேரம் வெளியே சென்று வாருங்கள். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.


* நான் சரியாகத்தான் நடந்து கொண்டேன், எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போன்ற கர்வ நடத்தைகளை தவிருங்கள்.


* வேலையில் மூழ்கி மனவருத்தங்களில் இருந்து விடுதலை பெறுங்கள்.


* மூச்சுப் பயிற்சியும் மனநிலை மாற்றத்திற்கு துணை செய்யும். 

1 வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்

1 வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகள் தருவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அத்தகைய உணவுகள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

குழந்தைகள் பிறந்து முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் தருவதே நல்லது. தாய்ப்பால் அதிகம் சுரக்காத தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபார்முலா மில்க் தரலாம். தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும். 6 மாதத்துக்கு பிறகு திடஉணவுகளைக் கொடுக்கலாம். குழந்தைக்கு செரிக்காத, ஒவ்வாத உணவுகளைக் கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் கெடலாம்.

குழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகளை சில காலம் வரை தராமல் இருப்பது நல்லது. அவை என்னென்ன? பார்க்கலாம்.


1 வயது வரை குழந்தைகளுக்கு தரவே கூடாத உணவுகள்…

* குழந்தைக்கு ஒரு வயது தொடங்கிய பிறகுதான் பசும்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலுக்கு பதிலாகவோ ஃபார்முலா மில்குக்கு பதிலாகவோ பசும்பாலை தரவே கூடாது. பசும்பாலில் உள்ள புரதங்களை குழந்தைகளால் செரிக்க முடியாது. இதனால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு வரும். இரும்புச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பாதிப்புக்குள்ளாகும். குழந்தையின் உடலில் நீர் வறட்சி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

* குழந்தைகளுக்கு உப்பு கொடுப்பது தப்பு. குழந்தைகளுக்கு சுவை அரும்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது. எனவே, உப்பு, இனிப்பு போன்ற சுவை குழந்தைகளுக்கு தெரியாது. பிளெயினான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உப்பு சேர்க்க தேவையில்லை. தாய்ப்பாலிலே சோடியம் கிடைத்துவிடும். மேலும், ஃபார்முலா பாலில் சோடியம் இருக்கும். நீங்கள் கூடுதலாக உப்பை திடஉணவில் சேர்த்து கொடுத்தால், குழந்தையின் உடலில் அதிக உப்பு சேரலாம். இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கும்.

* தீட்டப்பட்ட அதாவது ரீஃபைன்ட் சர்க்கரையை குழந்தைகளுக்கு தரவே கூடாது. பெரியவர்களும் சாப்பிட கூடாது. இதனால் பற்களில் சிதைவு ஏற்படலாம். மேலும் பல நோய்களுக்கு காரணமாகும். நோய் எதிர்ப்பு ஆற்றலை பலவீனப்படுத்தும். அதிக சர்க்கரை குழந்தைகளின் உடலில் சேர்ந்தால், உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை வரலாம். பழச்சாறுகளிலிருந்து கிடைக்கும் இயற்கை சர்க்கரை குழந்தைகளுக்கு நல்லது. ஆனால், இந்த ரீஃபைன்ட் சர்க்கரை பாதிப்பை ஏற்படுத்தும்.

* இறால், நண்டு போன்ற உணவுகளை தாய்க்கோ குடும்பத்தில் யாருக்காவது அலர்ஜி இருந்தாலோ குழந்தைக்கு இந்த உணவுகளைத் தர கூடாது. அதுவும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தரவே கூடாது. ஏனெனில் அலர்ஜி அறிகுறிகள் தீவிரமாக இருக்கும். குழந்தைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். எனவே இவ்வித உணவுகளை துளி அளவுக்கு கூட குழந்தைகள் தர வேண்டாம்.

* காபி, டீயில் கெஃபைன் அதிகமாக இருக்கும். இதை குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு காப்பி, டீ கொடுத்தாலும் மூச்சுத்திணறல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு, தூக்கமின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும். பெரியவர்கள் சாப்பிடும்போது குழந்தைகள் பார்ப்பார்கள். எனினும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். 

குழந்தையின் சேட்டையை பெற்றோர் அன்பாக சமாளிக்கும் முறை

குழந்தையின் சேட்டையை பெற்றோர் அன்பாக சமாளிக்கும் முறை
children-Pranks-parents-how-to-handle.


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. குழந்தைகளின் சேட்டையை இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது.

குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாங்கள் தான் குழந்தைகளை அடிக்கவில்லையே காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கும் விதமாக, குழந்தைகளை மிரட்டுவதற்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக என்று எப்படி சமாதானம் சொன்னாலும் பாதிப்பு என்பது உண்மை தான். குழந்தைகளை அவர்கள் வயதிற்கு தகுந்தாற் போல எப்படி அணுக வேண்டும் என்பதற்கான சில டிப்ஸ் இதோ…

இந்த வயதில் குழந்தைகளுக்கு அரவணைப்பு மிகவும் அவசியம். விளையாட்டாகவோ அல்லது உங்களை அறியாமலோ குழந்தையிடம் மிரட்டும் தொனியில் கத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அந்த அதிர்வை குழந்தைகளால் ஏற்றுக் கொள்வது சிரமம் என்பதால் தூக்கத்தில் அதிர்ந்து எழுந்து அழும், இதனால் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க மெலிதாக அவர்களை அணுகுவதே சிறந்தது. அதற்கு விரைவாக ரெஸ்பான்ஸ் கிடைப்பதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.


குழந்தைகளிடத்தில் கத்துவது என்பது அவர்களை நல்வழிப்படுத்தாது மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த வயதில் குழந்தைகள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடும். தன்னிடம் யார் நன்றாக பேசுகிறார்கள், எப்படி தன்னிடம் அணுகுகிறார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தைகளிடம் கத்துவது பெற்றோர் குழந்தை உறவுமுறையை பாதிக்கும். தன் எண்ணத்தை வெளிப்படுத்தாது தனிமைபடுத்திக் கொள்ள அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடும்.

கோபத்தை அன்பால் அணுகுங்கள், ஓடி வந்து எதையாவது சிந்திவிட்டால், ஏன் ஓடி வந்தாய்? என்று கத்தி இனிமே வந்த கால ஒடச்சுருவேன் என்று மிரட்டாமல், கொட்டிருச்சு வாங்க க்ளீன் பண்ணலாம் என்று அழைத்து நீங்கள் சுத்தம் செய்யும் போது உடன் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இரட்டிப்பு வேலை என்று நினைப்பதை குழந்தையிடம் பக்குவமாக உணர்த்துங்கள். மெதுவா வந்தா கொட்டியிருக்காதுல்ல இனிமே வீட்டுக்குள்ள ஓடிவரக்கூடாது என்று புரியவைத்திடுங்கள்.

குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதேயளவு குழந்தைகளிடம் பேசாமல் இருப்பதோ அல்லது அவர்களை கண்டிக்காமல் இருப்பதோ தவறு. சிறு வயதில் அதிக செல்லத்துடன் அவர்களை அணுகினால் வளர்ந்த பின்பும், தவறுகள் செய்யும் போதும் அதே செல்லத்துடன் தன்னை அணுக வேண்டும் என்று விரும்புவர் அது பொய்க்கும் போது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால் அன்பாக திருத்துங்கள்.கடிந்து, கத்தாமல் அரவணைத்து தவறை உணர்த்துங்கள்.