குழந்தைகளுக்கு சுத்தம் பற்றி சொல்லிக்கொடுங்க

குழந்தைகளுக்கு சுத்தம் பற்றி சொல்லிக்கொடுங்க
Teach-children-to-cleaning-habits.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 

குழந்தைகளுக்கு 5 வயதுக்கு முன்பிருந்தே, எழுந்ததும் பல் துலக்குவது, சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்றுவந்த பிறகும் கை கழுவுவது போன்ற அடிப்படை சுத்தம் பற்றி கொடுப்பது நல்லது.

உங்கள் குழந்தை வளர்ந்து சமூகத்துக்குப் பயன்படுகிறவர்களாக இருக்க, ஐந்திலேயே வளைக்கப்பட வேண்டும். 5 வயதுக்கு முன்பிருந்தே, எழுந்ததும் பல் துலக்குவது, தினமும் குளிப்பது, சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்றுவந்த பிறகும் கை கழுவுவது போன்ற அடிப்படை சுத்தம் பற்றிச் சொல்லிக்கொடுத்திருப்பீர்கள். ஐந்து வயதுக்குப் பிறகு, அவர்களின் சுற்றுப்புறத்தை எப்படிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க ஆரம்பியுங்கள்.

அவர்களை வெளியே அழைத்துச் சென்ற இடத்தில் சாப்பிடும் சின்ன சாக்லெட்டாக இருந்தாலும், அதன் பேப்பர் கவரை, குப்பைத்தொட்டியில் போடப் பழக்குங்கள்.

வீட்டில் சாப்பிட்டு முடித்ததும், தட்டை அவர்களின் சின்னக் கைகளால் முடிந்த அளவுக்குக் கழுவ பழக்கப்படுத்துங்கள்.

அப்பார்ட்மென்ட்களில் வசிக்கிறீர்களா? அங்குள்ள பிற குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஆளுக்கு ஒரு மாடியை என்று சுத்தம்செய்ய பழக்குங்கள். உங்கள் பிள்ளைக்கு டஸ்ட் அலர்ஜி பிரச்னை இருந்தால், அவர்கள் ஷெல்ஃபை மட்டும் சுத்தம் செய்துகொள்ளச் சொல்லுங்கள்.

தெருவில் எச்சில் துப்பினால், எச்சிலில் இருக்கும் கிருமிகளால் தொற்றுநோய்கள் வரும் என்று சொல்லிக்கொடுங்கள்.

மிகமுக்கியமாக, மட்கும் குப்பைகளையும் மட்காத குப்பைகளையும் தனித்தனி குப்பைத்தொட்டிகளில் போடுவதற்குப் பழக்குங்கள்.

ஒற்றை குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கான அட்வைஸ்

ஒற்றை குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கான அட்வைஸ்
single-child-parents

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 

ஒற்றைக் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் வளர்ப்பு விஷயத்தில் எந்த விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

இந்தக் காலத்தில் நாம் நம் பிள்ளைகளை தெருவிலோ அல்லது அப்பார்ட்மென்ட் தரை தளத்திலோ விளையாட அனுமதிப்பதில்லை. அவர்கள் நாலு சுவர் எனும் வீட்டுக்குள்தான் அதிக நேரம் இருக்கிறார்கள்.

இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டும், இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு விளையாடுவார்கள். விளையாட ஆள் இல்லை என்றால், இரு குழந்தைகள் மட்டும் விளையாடுவார்கள். அதனால், ஒற்றைக் குழந்தை வைத்திருப்பவர்கள் மற்ற குழந்தைகளோடு அதிக நேரம் விளையாட, பேச, குதூகலிக்க விடுங்கள். அதே சமயம்... அதீத செல்லத்தைக் கொடுக்காதீர்கள்.

இரண்டு பேர்தான் சம்பாதிக்கிறோமே, பிள்ளை கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கலாம் என்கிற தவற்றை செய்யாதீர்கள்.  'நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்' என்கிற எண்ணம் பிள்ளைகள் மனதில் வளராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு பிள்ளைகள் இருந்தால்தான் விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையைக் குழந்தையிடம் வளர்க்க முடியும் என்பதில்லை.

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இட்லியும், பூரியும் பிடிக்கும் என்பதை உங்கள் பிள்ளைகள் மனதில் பதிய வையுங்கள். உங்கள் குழந்தை அதிகம் தொடாத பொம்மைகளை, அவர்களிடம் கொடுத்த அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி குழந்தைகளிடமோ அல்லது நடைமேடையில் குடும்பம் நடத்துபவர்களிடமோ தரச் சொல்லுங்கள். மெதுவாக அவர்கள் மனதில் விசேஷ தினங்களின்போது முதியோர் இல்லங்களுக்குச் சென்று வருவதைப் பழக்கமாக்குங்கள்.

அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனப்பான்மை, பெரியவர்களை மதிக்க வேண்டும், கஷ்டம் என்பது என்ன... என்பதை உணர வையுங்கள். வீட்டில் ரோஜாப் பூக்கள் வாங்கி ஒன்று உனக்கு, இன்னொன்று வீட்டில் வேலைப் பார்க்கிற அக்காவுக்கு என்று, அவர்கள் கையாலேயே அதை கொடுக்கச் சொல்லலாம்.

பண்டிகைகளுக்கு டிரெஸ் வாங்கும்போது உங்கள் அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டியின் குழந்தைக்கும் ஒரு ஃபிராக் வாங்கி, அதை உங்கள் மகள் கையாலேயே செக்யூரிட்டியிடம் கொடுக்கச் சொல்லலாம். சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போகும்போது கட்டாயம் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அந்த வீட்டில் இருக்கிற ஒற்றைக் குழந்தையுடன் உங்கள் பிள்ளை சேர்ந்து விளையாடுவதன் மூலம், ஒரு உடன்பிறவாத அக்காவோ, தங்கையோ கிடைக்கலாம்.