பெற்றோர் குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை

பெற்றோர் குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை
Things-to-look-out-for-when-you-punish-children

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

* குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

* தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.

* தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும். உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.

* தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது, குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.

* தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான், அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.

* குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும். நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.

* குழந்தை தவறு செய்தால், தொடர்ந்து தண்டிக்க வேண்டும். ஒரு முறை தண்டிப்பதும், மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.

* குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும். தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தான் உருவாகும்.

* குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.

* தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையை விட மனரீதியான அணுகு முறையே சிறந்தது.

குழந்தைகளுக்கு கழிவறை பழக்கத்தை கற்றுக்கொடுக்க ஏற்ற வயது

குழந்தைகளுக்கு கழிவறை பழக்கத்தை கற்றுக்கொடுக்க ஏற்ற வயது
parents-teach-toilet-habits-for-children



          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சரியான வயதில் கழிவறைப் பழக்கங்களை கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும்.

குழந்தை பிறந்த நாள் முதல் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கட்டுப்பாட்டில் இல்லாத அனிச்சை சொல்களாகும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கழிவு நீக்கம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் வளரும் குழந்தைகளின் அந்நடத்தையை நெறிப்படுத்தி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக்கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சரியான சமயத்தில் கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும். 18 மாதங்கள் முடிந்தவுடன் இப்பயிற்சியை பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கத் துவங்குவது பொருத்தமானதாகும்.

குழந்தை தன் உடலியக்கத்தில் நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சியும், தன் உடல் தசைகளை கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பதும், உட்கார்ந்து எழுவது போன்ற உடல் திறனை பெறுவதும் கழிவறை பழக்க பயிற்சிக்கு அவசியம்.

இம்மூன்றும் 18 மாதங்கள் முடிந்தவுடன்தான் சாத்தியம் என்பது குழந்தை மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து.

பெற்றோர் மிகுந்த கண்டிப்புடன் கழிவறைக்குத்தான் செல்ல வேண்டும் என திடீரென கட்டாயப்படுத்துவதும், குழந்தைகள் அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களை தண்டிப்பதும் உடனடியாக குழந்தைகளிடத்தில் ஆளுமைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.

கட்டாயப்படுத்தாமல் படிப்படியாக குழந்தைகளின் கழிவறை நடத்தைகளை நெறிப்படுத்துவது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு அவர்களே எளிதாக கழட்டிக் கொள்ளும் வகையில் எலாஸ்டிக் வைத்த உடைகளை அணிவிப்பது, உட்கார்ந்து மலம் கழிக்க வசதியாக உபகரணங்களை பயன்படுத்துவது ஆகியவை அவசியம்.

குழந்தைகளின் நடத்தையை மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வரும் பெற்றோர் சிறுநீர் கழிக்கவோ அல்லது மலம் கழிக்கவோ குழந்தைகள் விரும்புகிறார்கள் என்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை கழிவறைக்கு தூக்கிச் செல்ல வேண்டும்.

குழந்தை தானே கழிவறை செல்ல வேண்டும் என்று தெரிவித்தாலோ அல்லது நாம் எதிர்பார்த்த வகையில் தன் உடையை கழற்றினாலோ, கழிவறையை நோக்கிச் சென்றாலோ அந்நடத்தையை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.

தொடர்ந்து இவ்வாறு பழக்கப்படுத்தி வந்தால் விரைவில் குழந்தைகள் தங்கள் கழிவறை நடத்தையை மேம்படுத்திக் கொள்ளும்.

கழிவறைப் பழக்கத்தை கற்றுக் கொடுப்பதிலிருந்தே பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையையும், அவர்களின் ஆளுமையையும் அறியலாம். குழந்தைகளின் கழிவறை நடத்தையை நெறிப்படுத்துவதில் மிகுந்த கண்டிப்புடன் நடந்துகொள்ளும் பெற்றோர் பிற எல்லா விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொள்வர்.

குழந்தையின் கழிவறைப் பழக்கத்தை நெறிப்படுத்துவதில் கரிசனத்துடன் நடந்து கொள்ளும் பெற்றோர் குழந்தைகளின் எல்லா விஷயத்திலும் பாசத்துடனும் அரவணைப்புடனும், அதே சமயத்தில், நல்ல பழக்கங்களை உருவாக்குவதில் உறுதியாகவும் இருப்பர்.

விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையை கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப்பண்பினை வளர்த்துக்கொள்ளும். பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாக உருவாக சரியான வயதில் கழிப்பறை நடத்தைகளை கற்றுக் கொடுப்பதை துவங்குங்கள்.

தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்

தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்
mother-and-father-are-the-first-teachers-of-the-children


   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
    
குழந்தைகள் வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

நாள்தோறும் வெளியாகும் குற்றச்செய்திகள் நம்மைக் கூசச்செய்கின்றன. அவற்றுள் பெரிதும் நம் உள்ளத்தைப் பதறச் செய்பவை சிறு பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையும், பள்ளிப் பிள்ளைகள் தற்கொலையுமே. இரண்டு துயர நிகழ்ச்சிகளும் உடனடிக் கவனம் செலுத்திக் களையப்பட வேண்டுமல்லவா?

ஆண், பெண் வேறுபாடு பற்றிய தெளிவுகூட இல்லாத சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுள் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகுதி எனும் செய்தி ஆணினத்துக்கே ஒரு மாபெருங் களங்கமாகும். குற்றம் செய்தவர்களைச் சட்டம் தண்டிக்கும். ஆனால் குற்றத்துக்குக் காரணமாக விளங்கும் சூழல்களைத் தெரிந்துகொண்டு அவற்றை நீக்குவது பெற்றோர்களின் பொறுப்பாகும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனத்துடன் பார்த்துக்கொண்டால் இந்தக் கொடுமை நிகழாமல் செய்துவிடலாமே. அதற்காகப் பிள்ளைகளை வீட்டுக்குளேயே பூட்டிவைக்க வேண்டும் என்று பொருளல்ல. அவர்களுக்குத் தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமையல்லவா?

வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளை வெறித்துப் பார்த்தல், முறைத்துப்பார்த்தல், உடலைத் தடவுதல், பிறர் அறியாமல் தீண்டுதல், கேலி செய்வதைப் போல சீண்டுதல் ஆகியவை தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.

சிறுவர்களாக இருந்தாலும், சிறுமிகளாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்த வேண்டும். இவற்றைப் பெற்றோர்களே செய்ய முடியும்; செய்யவேண்டும். அப்படி விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் உடனே தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு குழந்தைகளை அன்புடனும், பரிவுடனும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரத்தைச் செலவழிக்கும் பெற்றோர்கள் மிகுதி. அந்த நேரத்தைக் குறைத்துக்கொண்டு பிள்ளைகளோடு மனம்விட்டுப் பழகுவதற்கும் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கக்கூடாதா? அவ்வாறு பழகாததால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும், இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது.

பல நேரங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வரும் கதைமாந்தர்களிடம் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஈடுபாடு கூடப் பெற்றோர்களிடம் ஏற்படாமல் போய்விடுகிறதே...! ஏன்?

வீட்டுக்கு வெளியே தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பெற்றோரிடம் எடுத்துக் கூறும் தைரியம் குழந்தைகளுக்கு இல்லை. பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்கு இந்தத் துணிவை ஏற்படுத்தும். இந்தத் துணிவைப் பெற்றோர் உருவாக்காததால் பிள்ளைகள் சின்னச்சின்னச் சிக்கல்களுக்குக்கூடப் பயந்து உடனடியாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

“பாதகம் செய்வாரைக் கண்டால்
பயங் கொள்ளலாகாதுபாப்பா
மோதி மித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” எனச் சிறுவர், சிறுமிகளுக்குத் துணிவு ஏற்படுத்தப் பாரதியார் வழிகாட்டுவது இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமாக விளங்குகிறது.

தாயும் தந்தையும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் போதிய நேரமின்மையால் பிள்ளைகளின் மேல் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. முக்கியமாக, இத்தகைய குடும்பங்களில் வார விடுமுறை நாட்களில் பெற்றோர் பிற பணிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் பிள்ளைகளுக்காகவே தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்.

பிள்ளைகளுக்கு உண்மையாகவே ஊட்டமளிப்பது பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் பரிவுமேயாகும். இவற்றைப் புரிந்துகொள்ளாமல் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது மட்டுமே பெற்றோரின் பணி என்று பலர் கருதிவிடுகிறார்கள்.

முதலில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டும். அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சண்டை போட்டுக்கொள்ளும் வீடுகளில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல், அவர்கள் அறியாமலேயே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடுகின்றது.

“நீ அம்மா கட்சியா, அப்பா கட்சியா?” என்று வீட்டிலேயே அரசியல் மோதல் உருவாகுவது வீட்டுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. பிள்ளைகளின் வருங்காலம் கருதியும் நாட்டின் எதிர்காலம் கருதியும் பிள்ளைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்க்கு உரியது.

“ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்” என்னும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் பெற்றோர்களுக்கான அறிவுரையாகவும் விளங்குகிறது.

“இன்று குழந்தைகளுக்கு நல்ல வழியைக் காட்டி வளர்த்தால் நாளைக்கு அவர்கள் நாட்டுக்கே வழிகாட்டியாகத் திகழ்வார்கள்” என்னும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது.

மராட்டியச் சிங்கம் சிவாஜி குழந்தையாக இருந்தபோது அவரது தாய் ஜீஜாபாய் கூறிய வீரசாகசக் கதைகளே சிவாஜியைத் தலைசிறந்த வீரனாக உருவாக்கின. தேசத் தந்தை காந்தி சிறுவயதில் தாயாரிடம் கேட்ட அறிவுரைதான் அவரை மகாத்மா எனும் மாண்புநிலைக்கு உயர்த்தியது. ‘நவ இந்தியாவின் சிற்பி’ நேரு ஒரு சிறந்த தலைவராக உருவாக அவரது தந்தை மோதிலால் நேருவே காரணம்.

இவ்வாறு தலைவர்கள், அறிஞர்கள் பலரின் உருவாக்கத்திற்குப் பெற்றோரின் பங்களிப்பு முதன்மையான காரணமாக விளங்கியதனை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

‘தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். அதற்காகப் பிரம்பைக் கையில் தூக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். கண்டிப்பாகச் சொல்வதை விடக் கனிவாகச் சொல்வது மனத்தில் பதியும். அவர்களிடம் நண்பர்களாகப் பழகுங்கள். தங்கள் சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கப் பழக்குங்கள். சீர்தூக்கி ஆராயத் தெரிந்துகொண்டால் குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி அடைவார்கள்’ என்னும் தந்தை பெரியாரின் அறிவுரையைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 

குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
parents-advice-to-children

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்.

தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குறிப்பாக பழக்கிவிடப்படுகின்றனர். இதற்கு பெரும்பான்மையான காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே. மேலும், பல குழந்தைகள் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதை விடுத்து, ஒதுங்கி செல்லவே துணிகின்றனர். எதையும் தைரியமாக ஒப்புக்கொள்ளும் அல்லது தைரியமாகப் போராடும் நிலையும் குறைந்து வருகிறது.

இதற்கு காரணம் பெரும்பாலும் ஒரு சில குடும்பங்களில் ஒரு குழந்தையே போதும் என்ற தங்களது சுயநலம்தான் காரணம். இதனால் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, சுயநலமாகவே வாழப் பழகிவிடுகின்றனர். தனக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுக்கும் பண்பு தானாகவே வளர்ந்து, அது ஆரோக்கியமான பழக்கமாகிவிடும்.

சின்னச் சின்ன தவறுகளும், புறக்கணிப்புகளும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி தவறான முடிவுகளுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். எது அவமானம், எது பாராட்டுக்குரியது என்பதை அறியாமலே அந்த உணர்வுகளை தங்களுக்குள் எடுத்துக் கொண்டு சரியான முடிவு எடுக்க முடியாமல் பல குழந்தைகள் திணறி வருகின்றனர்.

குழந்தைகள் வளரும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை யாரிடமும் நம்பகத்தன்மையாக முன் வந்து அதற்கான தீர்வுகளை தேடுவதில்லை. இணையதளம், சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்களுக்கான தீர்வுகளை தேடுகின்றனர். அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட, மற்றொரு பிரச்சனைகளின் வசம் சிக்குகின்றனர்.

இப்படி குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்,

* பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை தவிருங்கள்.

* ஒரு தோல்வி ஏற்பட்டால், அதுதான் வெற்றிக்கான முதல் படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

* ஏமாற்றங்கள் தோல்விகள் அல்ல என்பதை எடுத்து கூறுங்கள்.

* அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். எது அத்தியாவசியம், எது அத்தியாவசியம் இல்லாதது என்பதை சொல்லிக் கொடுங்கள்.

* ஒரே குழந்தை இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எல்லாமே தனக்கானது என்கிற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே கற்றுக் கொடுங்கள்.

* அடிக்கடி உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளோடு ஒன்று கலந்து பழகும் சூழலை உருவாக்குங்கள்.

* ஆண், பெண் வித்தியாசம் பற்றி கற்றுக் கொடுங்கள்.

* இரண்டும், மூன்று குழந்தைகள் இருப்பின், ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, குறை சொல்லிப் பாராட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, தட்டிக் கொடுத்து சமமாக நடத்துங்கள்.

* உங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் கொடுக்கும் பொருட்களை, உங்கள் குழந்தைகளின் கரங்களாலேயே கொடுக்க வையுங்கள்.

* பள்ளிக்கூடங்களில் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை வீட்டிலும் கற்றுக் கொடுங்கள்.

* கணவன், மனைவி இடையே பிரச்சனையோ, உறவினர்களிடம் மனஸ்தாபமோ இருந்தால் அவற்றை உங்கள் குழந்தைகள் முன்பு காட்டிக் கொள்ளாதீர்கள்.

* செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.

* போதும் என்கிற மனப்பான்மைக்கு பழக்குங்கள்.

* அவர்களுடன் நட்புடன் பழகுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மறைக்காமல் உங்களிடம் குழந்தைகள் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?
how-open-bank-accounts-children



            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் ஒரு பாதுகாப்பை உருவாக்க உதவுவதோடு, அவர்களுக்குப் பணம் மேலாண்மை பற்றிய அடிப்படையைக் கற்றுக்கொடுக்கவும் உதவுகின்றன. இத்தகைய வங்கிக் கணக்குகள் மைனர் கணக்குகள் என்று வகைப் படுத்தப்படுகின்றன. 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் மைனர் என்று அழைக்கப்படுகின்றனர்.

யாரெல்லாம் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்? மைனரின் சார்பாக அவரின் காப்பாளர். மைனருடன் கூட்டாகச் சேர்ந்து அவரின் காப்பாளர் மைனரின் சார்பாக அவரின் சட்டப்பூர்வ காப்பாளர். 10 வயதிற்கு மேல் இருக்கும் மைனர் ஆண் அல்லது பெண் , அவரின் பெயரில் அவரால் இயக்கப்படும் ஒரு கணக்கு

படிவம் : வழக்கமான கணக்குத் திறப்புப் படிவம் பூர்த்திச் செய்து, இந்த மைனர் கணக்கை திறக்கலாம். மைனரின் பெயர், முகவரி, பாதுகாவலர் விவரங்கள் மற்றும் கையொப்பம் போன்ற விபரங்கள் அளிக்கப்பட வேண்டும்.

ஆவணங்கள் : கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும். மைனரின் பிறப்புச் சான்றிதழ் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள உதவும் கேஒய்சி ஆவணம். இது காப்பாளரின் KYC ஆவணமாக இருக்க வேண்டும். மைனரின் ஆதார் அட்டை. காப்பாளரின் மாதிரி கையொப்பம். 10 வயதிற்கு மேல் உள்ள மைனர் என்றால், அவரின் மாதிரி கையொப்பம்.

கணக்கின் செயல்பாடு: 10 வயதிற்குக் குறைவாக இருக்கும் மைனர், என்றால் அவரின் வங்கிக் கணக்கை அவருடைய காப்பாளர் நிர்வகிக்கலாம் . 10 வயதிற்கு மேல் உள்ள மைனர், அவருடைய வங்கி செயல்பாட்டை அவரே நிர்வகிக்கலாம்.

18 வயதிற்குப் பின்: மைனருக்கு 18 வயது முடிந்தவுடன், அவரின் வங்கிக் கணக்கு வழக்கமான சேமிப்பு கணக்காகக் குறிக்கப்படுகிறது. இனி, காப்பாளர் இவருடைய வங்கிக் கணக்கை நிர்வகிக்க இயலாது. மைனர், மேஜர் ஆனதற்கான சான்றை மற்றொரு கே ஒய் சி படிவத்துடன் இணைத்து வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கவணிக்க வேண்டியது : ஒவ்வொரு வங்கிக் கணக்கின் தினசரி பரிவர்த்தனை வரம்புகளை வங்கிகள் நிர்ணயித்துள்ளன, மற்றும் பெற்றோர்களிடமிருந்தான பரிவர்த்தனை வரம்புகளைச் சரிபார்க்க, சிறார்களின் கணக்குகளில் கூடுதல் பரிவர்த்தனை வரம்புகளை அனுமதித்திருக்கிறது



எந்த வயதில் தியானம் செய்யலாம்?

எந்த வயதில் தியானம் செய்யலாம்?
Meditation-start-age


             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


தியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம். எந்த வயதில் இருந்து தியானம் செய்ய ஆரம்பிக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

தியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம். பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி மிக முக்கியமானது. தியானத்தைத் துவங்கும் முன்பாக மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். மூச்சின் வழியாகவே நம் உயிருக்குத் தேவையான ஆக்சிஜனை உடல் எடுத்துக்கொள்கிறது. தேவையற்ற கார்பன் டை ஆக்சைடை  சுவாசத்தின் வழியாக வெளியே அனுப்பி வைக்கிறது.

ஆழமான மூச்சுப்பயிற்சியின் வழியாக உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கிறது. போதிய ஆக்சிஜன் கிடைக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். கிரியேட்டிவாக சிந்திக்கும். தியானத்தை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், உடல், மன நோய்களில் இருந்து நம்மை முழுமையாகத் தற்காத்துக் கொள்ளலாம்.

எந்த வயதினரும் தியானம் செய்யலாம். இதற்கு வயது பாகுபாடெல்லாம் இல்லை. அவரவர் வயதுக்கு ஏற்ப புரிந்துகொள்ளும் திறனின் அடிப்படையில் தியான முறைகள் இருக்கும். இன்றைய காலகட்டத்தில், ஒரு குழந்தை சரியாகப் பேசத் தொடங்கும் காலத்தில் இருந்தே  தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஐந்து வயதில் இருந்து குழந்தைகள் மனதை உற்று நோக்கவும் கட்டுப்படுத்தவும் பழகிக்கொண்டால் அவர்கள் வளர் இளம் பருவத்தை எட்டும்போது பெரிய அளவில் மனக்குழப்பங்களுக்கு ஆளாக மாட்டார்கள். திருமணம், வேலை என்று வரும்போது தனக்கானதைத் தேர்வு செய்வதும் திறனை மேம்படுத்திக் கொள்வதும் எளிதாகும்.

குழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்

குழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்
Documents-required-to-adopt-a-child



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே தொடங்கி சட்ட வழிமுறைகள், வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே துவங்க வேண்டும். சட்ட வழிமுறைகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

வழக்கறிஞர்கள் மூலம் சரியான உதவி இருந்தால் தத்து எடுப்பது சிக்கல் இல்லாமல் இருக்கும். தத்து எடுப்பது தொடர்பான பேச்சை முன்கூட்டியே துவக்கி தேவையான சான்றிதழ்களை எடுத்து வைக்கவும். சிந்தனையை செயலில் காட்டுவது நல்லது. தத்து எடுப்பதில் உதவும் வழக்கறிஞர்கள் அல்லது என்.ஜி.ஒ அமைப்புடன் பேசவும். உங்களை நன்றாக பரிந்துரைக்க கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதும் நல்லது.

தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்:

* அடையாள அட்டை
* இருப்பிட சான்றிதழ்
* திருமண சான்றிதழ்

* தத்து எடுக்கும் குழந்தையை வளர்க்க முடியாத அளவுக்கு, தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் குணமாக்க முடியாத அல்லது தொற்றக்கூடிய நோயால் பாதிக்கப்படவில்லை அல்லது உடல் நல அல்லது மனநில குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை எனும் சான்றிதழை பதிவு பெற்ற மருத்துவரிடம் இருந்து பெற வேண்டும்.

* குடும்ப புகைப்படம். தத்து எடுக்கும் குடும்பத்தின் சமீபத்திய புகைப்படம். ( மூன்று போஸ்ட்கார்டு சைஸ்).

* சுய தொழில் செய்யும் தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். நிறுவனத்தில் வேலை பார்க்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான சான்றிதழ் மற்றும் ஓய்வு பெறும் ஆண்டையும் குறிக்க வேண்டும்.

* தத்து எடுக்கும் பெற்றோரால் இரண்டு பரிந்துரை கடிதங்கள் அளிக்கப்பட வேண்டும். பரிந்துரை செய்பவர்கள் தத்து எடுக்கும் குடும்பத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்க கூடாது.

* தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள், ஆறு மாத வங்கி கணக்கு அறிக்கை, கடன் விவரங்கள் மற்றும் அசையும், அசையா சொத்து விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும்.

* இதற்கு முன்னர் தத்து எடுத்துக்கொண்டிருந்தால் அதற்கான ஆணையை அளிக்க வேண்டும்.

* தத்து எடுக்கும் பெற்றோர்களுக்கு ஏற்கனவே 7 வயதுக்கு மேற்பட்ட சொந்த குழந்தை(கள்) அல்லது தத்து - குழந்தைகள் இருந்தால் அவர்களது எழுத்துப்பூர்வமான சம்மதம் தேவை.

* தனியாக உள்ள தத்து எடுக்கும் பெற்றோர், நெருங்கிய உறவினரிடம் இருந்து, ஏதாவது எதிர்பாராத சூழலில் அவர் குழந்தையை பார்த்துக்கொள்வார் எனும் உறுதிமொழி தேவை.

* விவாகரத்து பெற்றவர் எனில், விவாகரத்து அல்லது சட்டப்பூர்வமான பிரிவு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.